வாழ்வியல்

பெண்களைத் தாக்கும் இரத்த சோகை நோயில் இருந்து தப்பிப்பது எப்படி?

பெண்களை நோய்கள் பல தாக்குகிறது. அப்படிப் பெண்களை தாக்குகின்ற நோய்களில் முதலிடம் வகிப்பது இரத்தச்சோகை. பொதுவாக பெண்களில் அனைத்து வயதினரையும் எளிதாக தாக்கும் இந்த நோய் இளம்பெண்களை பெரிதும் வாட்டி வதைக்கிறது. பெண்கள் இளம் பருவ வயதில் 20% உயரத்தில் 50% எடையிலும் வளர்ச்சியை பெறுகிறார்கள்.

இந்த அதிவேக வளர்ச்சிக்கு சரியான உணவு முறையை கடைப்பிடிக்க முடியாமல் போவதால் இளம் வயது பெண்கள் இரத்தச்சோகைக்கு ஆளாகிறார்கள் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சரியான சமவிகித உணவு மற்றும் இரும்பு சத்துள்ள உணவுப்பொருட்களை தவறாமல் உணவில் சேர்ப்பது போன்றவையே இரத்தச்சோகை ஏற்படாமல் இருக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

உடல் வளர்ச்சி அதிவேகத்தில் இருப்பது போல மனவளர்ச்சியும் தன்னிச்சையாக செயல்படும் தன்மையும் அதிகரிக்கும் காலம். இந்த இளம்பருவகாலம் இவர்கள் இரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டால் இழப்பு நம் நாட்டுக்குத் தான்.

இவற்றை சரிசெய்ய பெற்றோர்கள் செய்ய வேண்டியவை என்ன?

இளம் பருவ வயதினர் சரியான அளவில் சரிவிகித உணவை உண்கிறார்களா? என்று கண்காணிப்பது ஏன் அவ்வாறு உண்ண வேண்டும் என்று விளக்கம் அளித்து அவர்களுக்கு புரியவைப்பது. அவர்களின் செயல்களை சரிவர கவனித்து உணவுமுறை மாற்றங்களை செய்யவைப்பது ஆகியவையே இரத்த சோகை

நோயில் இருந்து பெண்களைக் காப்பாற்றும்.

இரத்த சோகை உள்ளது என்று அறிந்தபின் தகுந்த மருத்துவரை அணுகி இரும்புச்சத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின் படி சாப்பிடலாம். மாத்திரை மட்டும் இரத்தச்சோகை குணப்படுத்த முடியாது. அதற்கு தகுந்த உணவு வகைகளை தினமும் தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

கீரை வகைகளான, முருங்கைக்கீரை, அரைக்கீரை, ஆரைக்கீரை, அகத்திகீரை, பொன்னாங்கண்ணிக் கீரை போன்றவற்றை தினமும் கூட்டாகவோ பொரியலாகவோ உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

முடிந்தஅளவு தினமும் கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை உணவில் சேர்க்கவேண்டும். பழவகைகளில் திராட்சை, பப்பாளி, அத்திப்பழம், சப்போட்டா, ஆப்பிள் போன்றவற்றை நாளொன்றுக்கு ஒரு பழம் வீதம் உண்ண வேண்டும். முளைக்கட்டிய பச்சை பயறு, பாதாம், பிஸ்தா, ஆக்ரூட் போன்றவைகளை தினமும் சிறிதளவாது உண்டால் இரத்தச்சோகை

நோய் பெண்களுக்கு வராது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *