வாழ்வியல்

பெண்களும் அறிய வேண்டிய வரதட்சணை தடைச் சட்டம்!

‘வரதட்சணை’ என்னும் வார்த்தை இந்திய மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சாபக் கேடான வார்த்தையாகும். இன்று அதிகம் படித்தவர்கள், செல்வந்தர்கள், அரசு ஊழியர்கள், டாக்டர்கள், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் ஆண்கள் (மணமகன்கள்), மணக்கப்போகும் பெண்களின் குடும்பத்தாரிடம் பெறுவதே வரதட்சணை. பலர் கொடுத்தும், கொடுக்க முடியாமலும், அதனால் கொடுமைகளை அனுபவிக்கின்றனர். அனைத்து சாதியினரிலும் பல்லாண்டு காலமாய் இது நடைமுறையில் இருந்து பெண்களை விலைப் பொருள் போல் பார்க்கும் நிலை உள்ளது.

இதனால் வரட்சணை தடுப்பு சட்டம் 1961ல் இயற்றப்பட்டது. வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் குற்றமாகும். அப்படி கட்டாயப்படுத்தி வரதட்சணை வாங்கினால் 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.

பிரிவு 4ன் படி வரட்சதணை கேட்டால் 2 ஆண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் உண்டு. இதில் குற்றவாளிகளை ஜாமீனில் விட முடியாது. இதில் குற்றம் சாட்டப்பட்ட பின் கொடுப்பவர்/வாங்குபவர் சமரசம் செய்து கொள்ள முடியாது. இச்சட்டத்தில் வரதட்சணையை ஒழிக்க முடியவில்லை. பெற்றோர் குறிப்பாய் மாமியார்கள், இளைஞர்கள் நினைத்தால் இதை ஒழிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *