வாழ்வியல்

பெண்களுக்கு உண்டாகும் இரத்தப்போக்கைக் குணப்படுத்தும் வாழைப்பூ


நல்வாழ்வுச் சிந்தனை


வாழைப்பூ சமைத்துச் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும்.

வாழைப்பூவின் மருத்துவப் பயன்களை அறிய தொடர்ந்து படியுங்கள் .

உள்மூலம், வெளிமூலப் புண்கள், மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்ற அனைத்து மூலநோய்களையும் குணப்படுத்தும் .

வாழைப்பூ சமைத்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள் சரியாகும்.

வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் கோளாறுகள் சரியாகும்.

வாழைப்பூவானது மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள், மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.


Leave a Reply

Your email address will not be published.