செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்தது

சென்னை, நவ.9–

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 16 காசுகள் குறைந்து ரூ.81.08க்கு விற்பனையாகிறது. இதேபோன்று டீசல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.76.89க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இந்த நிலையில் தொடர் உச்சத்தில் இருந்து வந்த பெட்ரோல்–டீசல் விலை கடந்த 3 வாரங்களாகவே இறங்கு முகத்தில் இருக்கிறது.

கடந்த 18-ந் தேதியில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே வந்தது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இன்று பெட்ரோல், விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ரூ.81.08-க்கு விற்பனையாகிறது. டீசல் விலை 16 காசுகள் குறைந்து ரூ.76.89-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *