செய்திகள்

பெட்ரிசியன் கலை அறிவியல் கல்லூரி 1055 மாணவர்களுக்கு பட்டங்கள்

சென்னை-, பிப். 4–

பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், 15 வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவினை கல்லூரியின் தாளாளர் அருட்சகோதரர் டாக்டர் ஜான்சன் ரெக்ஸ் தனபால் தொடங்கி வைத்தார். கல்லூரியின் முதல்வர் அ.ஜோசப்துரை சிறப்பு விருந்தினராக வருகைத்தந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின், முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ்.பி.தியாகராஜனை வரவேற்று அறிமுகவுரை நிகழ்த்தினார்.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வில் வெற்றி பெற்ற 1055 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு இவ்விழாவில் பட்டமளிக்கப்பட்டது. 75 விழுக்காட்டிற்கு மேல் தேர்ச்சி விகிதம் பெற்ற 140 மாணவர்கள் வெவ்வேறு பாடங்களில் பல்கலைக்கழக அளவில் மதிப்பெண் தரப்பட்டியலில் மிகச்சிறந்த இடங்களைப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சான்றாக இளங்கலை பி.எஸ்.டபுள்யூ படிப்பில் பாரதி என்கிற மாணவி சென்னைப் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்துயுள்ளார் எம்.ஏ. ஆங்கில இலக்கியத்தில் வினிதா வின்சென்ட் என்கிற மாணவியும் சென்னைப் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.

புதிய கற்பித்தல் முறைகளால் சிறந்து விளங்கும் இக்கல்லூரியில் கலை, இலக்கியம், விளையாட்டு சார்ந்தும் மாணவர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது

டாக்டர் எஸ்.பி.தியாகராஜன் சிறப்புரையாற்றும் போது பல்கலைக்கழக அளவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களைப் பாராட்டினார். மேலும் அவர் கல்வியோடு சேர்ந்து மாணவர்கள் தங்களின் மேலான திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். நேர்மையான கடின உழைப்பினைச் செலுத்தி தங்களின் வாழ்வை வளப்படுத்திக்கொள்ளும், அதே வேளையில் தாய்நாட்டின் வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் தங்களின் பங்களிப்பை வழங்குதல் அவசியம் என்று எடுத்துக்கூறினார். இவ்விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள்,உறவினர்கள்,நண்பர்கள் என திரளானோர் பங்கேற்று மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *