செய்திகள் போஸ்டர் செய்தி

பெட்டி நிறைய ஐஸ்கிரீம் கொடுத்து சீன அதிபரை குஷிப்படுத்திய ரஷ்ய அதிபர்!

Spread the love

துசான்பே, ஜீன்.16–
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டின், தஜிகிஸ்தான் நகரில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்கு வந்து சீன நாட்டின் பிரதமர் ஜி ஜின்பிங்கிற்கு ஒரு சூட்கேஸ் அளவிலான பெட்டியில் ஐஸ்கிரீமை பரிசாக வழங்கினார்.
சீன அதிபருக்கு 66-வது பிறந்த நாள் என்று கேள்விப்பட்டதும் அவருக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த ரஷ்ய அதிபர், “உங்களைப் போன்று ஒரு நண்பனை அடைந்து இருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி” என்று பெருமிதத்தோடு கூறினார்.
அவருடைய பிறந்த நாள் பரிசாக அவரே ஆச்சரியப்படும் விதத்தில் ஜி ஜின்பிங்கிற்கு ஐஸ்கிரீம் வழங்கி மகிழ்வித்தார். இதேபோல நாவில் நீர் வரவழைக்கும் ருசிகரமான கேக்கையும் ஒரு பெட்டியில் வைத்து சீன அதிபருக்கு பரிசாக வழங்கினார் விளாதிமிர் புட்டின். பிறந்த நாளையொட்டிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரு நாட்டுத் தலைவர்களுடன் உச்சி மாநாட்டில் பங்கேற்ற 27 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றார்கள்.
ஆசியாவில் நம்பிக்கை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ஈரான், குவிடார் உள்ளிட்ட 27 நாடுகள் பங்கேற்கும் உச்சி மாநாடு தஜிகிஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு சீன அதிபரும் வந்திருந்தார். மூன்று நாள் அவர் ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற விளாதிமிர் புட்டின், “என்னுடைய மிகச் சிறந்த நண்பர் ஜி ஜின்பிங் என்று மகிழ்ச்சியோடு கூறினார். அதோடு இரு நாடுகளுக்கு இடையே உறவுகள் இன்னும் வலுப்பட நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும், என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *