செய்திகள்

‘பெஞ்ஜல்’ புயல்: கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர். சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

Makkal Kural Official

சென்னை, நவ.30-

புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெஞ்ஜல் புயல் இன்று (சனிக்கிழமை) கரையை கடப்பதால், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.

புயல் கரையைக் கடக்கும்போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவை தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதை கண்டிப்பாக தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்பாக கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அரசின் அனைத்து பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று நடக்க இருந்த அண்ணா பல்கலைக்கழக தொலைதூர தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு, தேர்வுகள் நடத்தப்பட கூடாது. ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *