சென்னை, ஜன.28–
பெசன்ட் நகர் கடற்கரையை சுத்தம் செய்த தன்னார்வலர் அதுல்யா சீனியர் கேர் 98 வயது காமாட்சி பாட்டிக்கு தலைமை அதிகாரி ஜி.சீனிவாசன் விருது வழங்கினார்.
மூத்த குடிமக்களுக்கான வாழ்விட பராமரிப்பு துறையில் முதன்மை வகிக்கும் அதுல்யா சீனியர் கேர், அதன் முதன்மை முன்னெடுப்பு முயற்சியான # Caring For A Senior என்பதன் கீழ், சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில், சமூக உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் கடற்கரையை தூய்மையாக்கும் நிகழ்வை நேர்த்தியாக ஏற்பாடு செய்து நடத்தியது.
அர்பேசர் சுமித் மற்றும் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் ஒர்க் ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்ட இந்த முன்னெடுப்பான நடவடிக்கை சுற்றுச்சூழல் நிலைப்புத்தன்மை மீது அதுல்யாவின் பொறுப்பு மற்றும் வாக்குறுதியும் ஒரு அங்கமாக அமைகிறது. மூத்த குடிமக்களது நலவாழ்விற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அதுல்யாவின் சமூக பொறுப்புக்கும் இது எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
அதுல்யா 98 வயதான சமூக செயற்பாட்டாளர் காமாட்சி சுப்பிரமணியன் (காமாட்சி பாட்டி) சுற்றுச்சூழல் விழிப்புணர்விற்கான தனது பங்களிப்பை அங்கீகரிப்பதன் மூலம் பாராட்டப் பட்டார்.
200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் சுமார் ஒரு டன் கழிவுகள் மற்றும் குப்பைகளை சேகரித்தனர்.
சுற்றுச்சூழல் மீதான அக்கறை மற்றும் மூத்த குடிமக்களது நலவாழ்வு ஆகிய இரண்டின் மீதும் உறுதியான கூர்நோக்கத்தோடு செயல்படும் அதுல்யாவின் இந்த தூய்மையாக்கல் நிகழ்வில் 200க்கும் அதிகமான தன்னார்வலர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர். தேசிய தூய்மை தினத்திற்கு முன்னோடியாக நடத்தப்பட்ட இச்சேவை நிகழ்வில் அதுல்யாவின் அர்ப்பணிப்புமிக்க பணியாளர்கள், மாணவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் குடியிருப்பவர்கள் கலந்து கொண்டு சென்னையின் புகழ்பெற்ற பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மையாக்கும் பணியில் ஒருங்கிணைந்து ஈடுபட்டனர்.
அதுல்யாவின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான
ஜி. சீனிவாசன், ‘‘நமது மூத்த குடிமக்களின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு தூய்மையான மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சூழல் என்பது ஒரு அடிப்படையான அம்சம் என்று அதுல்யாவில் நாங்கள் நம்புகிறோம்.
# Caring For A Senior என்ற எமது முதன்மை முன்னெடுப்பு திட்டத்தின் வழியாக முதியவர்களுக்கு மரியாதை மற்றும் கனிவான அக்கறை என்ற கலாச்சாரத்தை சமூகத்தினர் மத்தியில் ஊக்குவிப்பது எமது நோக்கமாகும் என்றார்.
மூத்த குடிமக்களுக்கு அவசர நிலை சிகிச்சையை வழங்க காவல்கரங்கள் அமைப்பிற்கு அவசரநிலை சிகிச்சை ஊர்திகளை அன்பளிப்பாக வழங்கியது உட்பட மூத்த குடிமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு சமூக நலத்திட்டங்களை அதுல்யா மேற்கொண்டு வருகிறது.
இதுபோன்ற சீரிய முயற்சிகளின் மூலம் முதியோருக்கான பராமரிப்பானது சமூக பிரச்சனைகளோடு இணைந்து செயல்படும் விதத்தை அதுல்யா மறுவரையறை செய்கிறது.
தென்னிந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு உதவப்படும் வாழ்விட சேவைகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக அதுல்யா சீனியர் கேர் செலாற்றுகிறது.
சவுகரியமான மற்றும் கண்ணியமான சூழலில் கனிவான பராமரிப்பையும், ஆதரவையும் வழங்கும் சேவையில் தன்னை அதுல்யா அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது. இதன், # Caring For A Senior முன்னெடுப்பின் வழியாக முதியோர்களுக்கு வாழ்க்கையின் தரத்தை மறுவரையறை செய்யும் அதுல்யா, சுகாதாரம், நலவாழ்வு மற்றும் சமூக பராமரிப்பு ஆகியற்றில் சமூக மாற்றத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது என்றார்
ஜி. சீனிவான்.