லண்டன், மார்ச் 3–
உளவுத் துறையில் உள்ள அதிகாரிகள் சிலர் என்னை தொடர்புகொண்டு, போனில் கவனமாக பேசுங்கள் என எச்சரித்தனர் என ராகுல்காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உரையில் கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி, இங்கிலாந்துக்கு ஒரு வாரப் பயணமாக சென்றுள்ளார். அங்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கௌரவ விரிவுரை உட்பட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார்.
ராகுல் காந்தியின் இங்கிலாந்து பயணத்தின் போது, அவரது புதிய தோற்றம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
ராகுல் காந்தி பேச்சு
அப்போது பேசிய அவர், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரது செல்போன்களில், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் உள்ளது. என்னுடைய செல்போனிலும் பெகாசஸ் இருந்தது. உளவுத் துறையில் உள்ள அதிகாரிகள் சிலர் என்னை தொடர்புகொண்டு, போனில் கவனமாக பேசுங்கள், நீங்கள் பேசுவதை நாங்கள் ரெக்கார்ட் செய்து வருகிறோம் என என்னை எச்சரித்தனர் என, பாரதீய ஜனதா தலைமையிலான இந்திய அரசு இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரது செல்போன்களை ஒட்டுக்கேட்டதை மீண்டும் தெரிவித்துள்ளார்.