வாழ்வியல்

பூமி வெப்பமாவதால் உருகிய 9 லட்சம் கோடி பனிப்பாறைகள்!

பூமி வெப்பமாவதால், உலகெங்கும் உள்ள பெரும் பனிப் பாறைகள் உருகிக் கரைகின்றன. கடந்த, 1961 முதல் 2016 வரை, பூமி சூடேற்றத்தால் கரைந்த பனிப் பாறைகளின் அளவு எவ்வளவு?

அண்மையில், ‘நேச்சர்’ இதழில் வெளியாகிஉள்ள ஆய்வின்படி, 9 லட்சம் கோடி டன் அளவுக்கு பனிப்பாறைகள் உருகி, கடலில் கலந்திருக்கின்றன. ஆய்வுக்குள்ளான, 55 ஆண்டுகளில் அதிகமான இழப்பு அலாஸ்கா பகுதியில் தான். இங்கு மட்டும் அந்தக் காலகட்டத்தில், 3 லட்சம் கோடி டன் உருகி கடலில் கலந்துள்ளன.

கிரீன்லாந்திலுள்ள பெரும் பனிப்பகுதியிலிருந்து, 1.237 லட்சம் கோடி டன் பனி மாயமாகிவிட்டது. மூன்றாவது இடத்திலிருக்கும் தெங்கு ஆண்டிஸ், 1.208 லட்சம் டன்னை இழந்துள்ளது. சிறிய ஆறுதலாக, தென் மேற்கு ஆசியப் பகுதியிலுள்ள பனிப்பாறைகள், 11 ஆயிரத்து, 900 கோடி டன் அளவுக்கு பனிப்பாறைகள் எடை கூடியுள்ளன.

ஆனால், தென் கிழக்கு ஆசியப் பகுதியில் அதை சரிக்கட்டும் வகையில், 11 ஆயிரத்து 200 கோடி டன் பனிக்கட்டிகள் உருகி, கடலை நோக்கி பாய்ந்துள்ளன. நேரடியான ஆண்டுக்கான ஆய்வு, செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம், விஞ்ஞானிகள் பனிப் பாறை உருகுதலை கணக்கிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *