போஸ்டர் செய்தி

பூமியிலிருந்து இன்று பிரிந்து நிலவின் சுற்றுப்பாதைக்கு செல்கிறது ‘சந்திரயான் -2’

பெங்களூரு,ஆக.14–

நிலவை ஆராய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’வால் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ள, ‘சந்திரயான் -2’ விண்கலம் இன்று பூமியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து பிரிந்து நிலவின் சுற்று வட்டப் பாதையை அடைய உள்ளது.

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோடா விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஜூலை22 ல் நிலவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது சந்திரயான் -2 விண்கலம். 3,485 கிலோ எடையுள்ள அந்த விண்கலத்தில் நிலவில் இறங்கவும் சுற்றி வரவும் ஆய்வு செய்யவும் அதிநவீன கருவிகள் உள்ளன. இதுவரை, பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த அந்த விண்கலம், ஆறு முறை உயர்த்தப்பட்டு இன்று அதிகாலை 3–4 மணிக்குள் நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு உந்தப்படுகிறது.இதற்கான பணிகளில், இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வரும், 20 ம் தேதி, நிலவின் சுற்று வட்டப்பாதையை அடையும் சந்திரயான் -2, மேலும் பல நாட்கள் பயணித்து, செப்டம்பர் ௭ல், நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, நிலவின் தென் பகுதியில் எந்த நாட்டின் விண்கலங்களும் தரையிறங்காத நிலையில் அந்த சாதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் படைக்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *