சிறுகதை

பூனையின் அன்பு- ராஜா செல்லமுத்து

அன்பு வீட்டிற்கு அடிக்கடி ஒரு பூனை வரும் .அதைத் துரத்துவது தான் அவன் வேலையாக இருக்கும்.

இந்தப் பூனை ஏன் இங்கு வருது? எப்ப பார்த்தாலும் கத்திகிட்டு இருக்கு. இது கத்துறது,எனக்கு ஒரு மாதிரி இருக்கு.அதனால எப்படியாவது அந்த பூனையை விரட்டி விடவேண்டும் என்று இருப்பான்.

அது எவ்வளவு தடுத்தும் அந்த பூனை வீட்டிற்கு அடிக்கடி வந்து கொண்டிருக்கும். அந்த பூனையை பார்த்ததும் அன்புக்கு மிகவும் எரிச்சலாக இருக்கும். எதற்கு இந்த பூனை வருகிறது என்று திட்டிக்கொண்டே இருப்பான்.

அதற்கு சாேறும் வைப்பதில்லை. தண்ணீரும் வைப்பதில்லை. ஆனாலும், அந்தப் பூனை அன்பின் வீட்டுக்கு வந்து கொண்டே தான் இருக்கும்.

விட்டிருலிக்கும் அம்மா கூட

எதுக்குடா பாவம் அந்த பூனைய வெரட்டுற ; விடு என்று சொன்னாலும்

இல்லம்மா ஒனக்கு தெரியாது. பூன முடி விழுந்தா, உடம்புக்கு ஆஸ்துமா வரும்; இல்லை அதுவும் எப்ப பார்த்தாலும் கத்திக்கிட்டு இருக்கு என்று அம்மாவிடம் சொல்வான்.

பூன பாவம். கத்திட்டேதான் இருக்கு. ஆனா என்ன நடக்குதுன்னு தெரியல. அதனால கொஞ்சம் விடு; அது வந்து போகட்டும் என்ற அம்மா சாென்னாள்,

அன்பு அந்தப் பூன இங்க வரக்கூடாது ; வரவே கூடாது என்றுதான் சாெல்வான்.

அவனது வீட்டுக்கு பூனை வருவதும் அங்கு கத்துவதும் வாடிக்கையாக இருந்தது.

ஒருநாள் இரவு அவர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கும்போது ரொம்ப உக்கிரமாகக் கத்திக் காெண்டிருந்தது.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அன்புக்கு கோபமும் ஆத்திரமும் ஒரு சேர பற்றிக்கொண்டது.

என்ன இது ?இவ்வளவு அக்கம் பக்கத்தில் இருக்கம் தூங்க விடாம கத்திட்டு இருக்கு இதஅடித்து துரத்த வேண்டும் என்று வெளியே வந்தான்.

வந்ததும் அவன் கண்ட காட்சி அவனை கிறங்க வைத்தது .அவன் வீட்டிற்கு முன்னால் ஒரு பெரிய பாம்புடன் பூனை சண்டை பாேட்டுக் காெண்டிருந்தது .

சண்டை போட்டு அந்த பாம்பை வீட்டிற்குள் வரவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த பூனையை அன்புவின் வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்துக் காெண்டிருந்தது.

அந்தப் பாம்பை அடிக்க திராணியும் தைரியமும் இல்லை.அதனால் அந்தப் பூனை அந்த நச்சுப் பாம்புடன் சண்டை போட்டுக்கொண்டு வீட்டுக்குள் விடாமல் தடுத்துக் கொண்டு இருந்தது.

இதை பார்த்த அன்புக்கு கண் கலங்கியது.

அம்மா சொன்னாள் :

டேய் பார்த்தியா? இதுக்கு தான் இந்த பூன நம்ம வீட்டில கத்திட்டுருந்திருக்கு பாேல. ஏதோ ஒரு வகையில் நமக்கு ஆபத்து ஏற்படும் அப்பிடின்னு அதுக்கு தெரியும் போல.

அதனால தான் நம்மள பாத்து கத்திட்டிருக்கு . இப்ப பாரு எவ்வளவு பெரிய பாம்பு கூட சண்ட போட்டிருக்குன்னு. ஒருவேளை இந்த பூன இல்லாம இருந்தா, அந்த பாம்பு நம்ம வீட்டுக்குள்ள வந்து நம்மள யாரையாவது கடிச்சிருக்கும் ; நமக்கு ஏதாவது நடந்திருக்கலாம்.

இந்த பூனைக்கு இது தெரியுது. அது கூட சண்டை போட்டுட்டு கொண்டிருக்கு; பூன இல்லன்னா நம்ம நிலம மோசமாயிருக்கும் என்று வருத்தப்பட்டாள் அன்புவின் அம்மா.

அப்போது அந்தக் கொடிய நாகத்துடன் சண்டை போட்டுக் காெண்டிருந்து, அந்த நாகத்தை கடித்துக் குதறியது.

அதன் வாய் ,உடம்பு என்று எல்லா இடத்திலும் ரத்தம் இருந்தது. அன்புக்கு அந்தப் பூனை மீது அன்பு மிகுந்தது.

அதுவரையில் அந்தப் பூனையை எப்போது பார்த்தாலும் துரத்திக் கொண்டிருந்த அன்புக்கு ரத்தத்துடன் இருக்கும் பூனையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டு கண்கலங்கினான்.

அந்தப் பூனைக்கு ஏதாவது வந்து விடும். விஷம் ஏறலாம் அத கூட்டிட்டு பெட் கிளினிக்கு போ என்று அன்பின் அம்மா கூறினாள்

தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அந்தப் பூனையைத் தூக்கியபடியே விரைந்தான் அன்பு.

Leave a Reply

Your email address will not be published.