செய்திகள்

பூனா தேசிய ஆசிரியர் மகாசபை மாநாட்டில் விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

வேலூர், ஜன. 12–

அரசியலில் சாதனை ஏழை மாணவர்களுக்கு விஐடியில் இலவச உயர்கல்வி வழங்குவதற்கான ஸ்டார்ஸ் திட்டம் அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை உள்ளிட்டவைகளில் சாதனை படைத்து வரும் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதனுக்கு பூனாவில் நடைபெற்ற தேசிய ஆசிரியர் மகாசபை மாநாட்டில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் வழங்கும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான 3வது உலகளாவிய தேசிய ஆசிரியர் மாநாடு அண்மையில் மகாராஷ்டிர மாநிலம் பூனாவில் உள்ள எம்ஐடி உலக அமைதி பல்கலைக்கழகத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் சர்வதேச அளவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில் டிஜிட்டல் புரட்சிக்கான உயர்கல்வியில் தேவைகள் என்பது பற்றி ஆசிரியர் மாணவர்களுக்கு எத்தகைய கற்பித்தல் முறையை கையாள்வது என்பது பற்றி இம்மாநாட்டில் பேசப்பட்டது.

மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் கவுரவிக்கப்பட்டார். அரசியலில் சாதனை, விஐடியில் சர்வதேச தரத்தில் உயர்கல்வி, விஐடியில் ஏழை மாணவர்களுக்கான இலவச கல்வி திட்டமான ஸ்டார்ஸ் திட்டம், வசதியற்ற மாணவர்கள் எந்த உயர்கல்வி நிறுவனத்தில் பயிலுவதற்கான அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை திட்டம் ஆகியவற்றில் சாதனை படைத்து வருவதற்காக விஐடி வேந்தர் ஜி.விசுவநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதனை தேசிய ஆசிரியர் மகாசபை நிறுவனர் மற்றும் எம்ஐடி உலக அமைதி பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டாக்டர் விஸ்வநாத் காரத், தேசிய ஆசிரியர் மகாசபை பேராசிரியர் தலைவர் ஆர்.ஏ. மஷெல்கர் ஆகியோர் இணைந்து வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *