நல்வாழ்வுச் சிந்தனைகள்
கணையம் என்று சொல்லப்படும் ஜீரண மண்டலத்தின் முக்கிய உறுப்பு ரத்தத்தில் சர்க்கரை உணவினை சீராக வைக்க உதவுகின்றது. செரிமானத்திலும் இதன் பங்கு அதிகம் உண்டு. இப்படிப்பட்ட கணையத்தினைக் காப்பதற்கும் நம் வீட்டிலேயே எளிதான உணவுகள் உள்ளன. அவை வருமாறு:–
மஞ்சள் வீக்கத்தினைக் குறைக்க வல்லது. கணையத்தில் ஏற்படும் எரிச்சல் உணர்வினை நன்கு குறைக்கக் கூடியது. உணவில் மஞ்சள் சேர்ப்பது நமது பழக்கம்தான் என்றாலும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்த பால் சாப்பிடுவது, சுடுநீரில் ¼ டீஸ்பூன் மஞ்சள் கலந்து குடிப்பது போன்றவை பழக்கத்தில் உள்ளன. இதனைப் பற்றி அலோபதி அல்லது ஆயுர்வேத மருத்துவர் மூலம் கேட்டு அவரவர் உடலின் தன்மைக் கேற்ப எடுத்துக் கொள்வது நல்லது.
உணவினில் பூண்டு அதிகம் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு ரொம்ப நல்லது. பூண்டு நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை ஏற்படுத்தும். மேலும் உடலின் அனைத்து உறுப்புகளின் திசுக்களையும் சீர்படுத்தும்.
பசலை கீரை- இதில் உள்ள இரும்பு சத்து உள்ளுறுப்புகள் வீக்கத்தினைக் குறைக்க வல்லது. வைட்டமின்-பி சத்து கிடைக்கின்றது. பூண்டு சாப்பிட்டால் புற்று நோய் பாதிப்பினை வெகுவாய் குறைக்கும் .
இதே போன்று புரோகலி, காலிபிளவர் போன்றவை புற்று நோய் பாதிப்பினை குறைக்கும் சக்தி கொண்டவைகள் ஆகும்.
பொதுவில் கொட்டை வகை உணவுகள் மூளையைக் காக்கும் என்பர். தக்காளி இருதயத்திற்கு நல்லது. அது போன்று சர்க்கரை வள்ளிக் கிழங்கு கணையப் புற்று நோய் பாதிப்பினை 50 சதவீதம் வரை குறைக்க வல்லது.
மது, புகை இல்லாது இருக்க வேண்டும். தேவையான அளவு நீர் குடிக்க வேண்டும். இவற்றினைக் கடைபிடிப்பது எளிது தானே. செயல்படுத்துவோம்.
கல்லீரல்- என்றாலே பாதுகாப்பிற்காக மஞ்சள், துளசி, இஞ்சி, ஜீரகம், தனியா, புதினா இவைகளின் சில கலவைகளை மாறி மாறிஉணவில் சேர்த்து சாப்பிடலாம்; இவற்றைச் சேர்த்து டீ வைத்துக் குடிக்கலாம். சமைத்து உண்ணலாம்.
முள்ளங்கி, முள்ளங்கி இலை, முட்டைகோஸ், புரோகலி போன்றவற்றினை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
எண்ணையில் தயாரான உணவுகளை தவிர்த்து விடுங்கள். கல்லீரல் நன்றாக இருக்கும்.