வாழ்வியல்

புவி வெப்பத்துக்கு காரணமான வாயுவை உண்ணும் பாக்டீரியா!

பலவித ஆலைக் கழிவுகள், இயற்கைக் கழிவுகளிலிருந்து கசியும் மீத்தேன், காற்று மண்டலத்தில் கலந்து திரண்டு, பூமியிலிருந்து வெளியேறும் வெப்பத்தை தடுத்து நிறுத்துகிறது.

இதனால் புவி வெப்பமாதல் அதிகரிக்கிறது. வளி மண்டல மீத்தேனை அப்படியே கபளீகரம் செய்யும் ஒரு பாக்டீரியாவை, ஐரோப்பிய விஞ்ஞானிகள் அண்மையில் அடையாளம் கண்டுள்ளனர்.

காற்றை உண்டு, காற்றிலேயே வாழும், ‘மெதைலோகேப்சா கோர்கோனா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாக்டீரியாக்கள், மீத்தேன், நைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் ஆகியவற்றை உட்கொண்டு உயிர்வாழ்கின்றன.

இந்த புதுவித பாக்டீரியாவை வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆய்வகத்திலேயே வைத்து வளர்க்கும் உத்தியையும் கண்டறிந்துள்ளனர்.

புவி வெப்பமாதலுக்கு காரணமான மாசுகளை உணவாக உட்கொள்ளும் இதுபோன்ற வேறு நுண்ணுயிரிகள் உள்ளனவா என்பதையும் வியன்னா விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

சில ஆண்டுகளில், அவற்றை ஏராளமான அளவில் காற்றில் கலந்துவிட்டு, மாசுபாட்டை வேகமாகக் குறைக்க முடியும் என, அந்த விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *