வாழ்வியல்

புவியியல் மாற்றங்களால் உருவாகும் கல்மரம்

Spread the love

கல்மரம் என்பது தாவரங்கள் மண்ணுள் புதைந்து பாறைப் படிவ நிலைமையில் இருப்பதைக் குறிக்கும். அதுவே பல கல் மரங்கள் ஒரே பகுதியில் இருக்குமாயின் அதைக் கல்மரக்காடு என்பதும் உண்டு. மிகப் பழைமையான மரங்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னரே வளர்ந்திருக்கும். ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் 4 பனியுகங்கள் உண்டானதாக புவியியல் ஆய்வாளர்கள் கூறுவதுண்டு. அந்த காலங்களில் ஏற்பட்ட புவியியல் மாற்றங்களால் மரங்கள் மண்ணில் புதைந்து கல்மரங்களாகிவிடும். அந்த மரத்தின் வகையைக் கொண்டு அந்தப் புவியமைப்பின் காலத்தைக் கணிப்பதன் மூலம் ஒரு இடத்தின் தொன்மையான புவியியல் அமைப்புகளைக் கண்டறிய இயலும்.

தொல்லுயிரியல் ஆய்வாளர்களிடையே இக்கல்மரங்கள் ஒரு விந்தையாகவே பார்க்கப்படுகிறது. அதன் காரணம் ஒரு உயிரினம் கல் மரமாகவோ மிருகமாகவோ மாற அது இறந்து அழுகும் முன்னர் அதன் உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் கால்சியம் கார்பனேட்டும் சிலிகாவும் புகுந்திருக்க வேண்டும். அதுவே அந்த உயிரினம் மக்கி விட்டால் அது கல்மரமாக ஆகாமலே மண்ணில் கலந்துவிடும். அந்த விதத்தில் இதைப் போன்ற அதிவேக உயிரியல் மற்றும் கனிம மாற்றங்கள் நிகழ்த்தப்படுவது தொல்லுயிரியல் ஆய்வாளர்களிடையே ஒரு விந்தையாகவே பார்க்கப்படுகிறது. இது போன்ற கல்மரங்கள் தமிழகத்தில் சாத்தனூர், திருவக்கரை போன்ற இடங்களில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *