செய்திகள்

புவனேஸ்வரைச் சேர்ந்த இளம் வயது எம்.பி. 26 வயது சந்திராணி: பி.டெக் பட்டதாரி

புவனேஸ்வர், மே 25

நடந்து முடிந்திருக்கும் 17வது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மிக இளம் வயது உறுப்பினராக 26 வயது சந்திரராணி முர்முனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புவனேஸ்வரில் கியோன்ஜார் தொகுதியிலிருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாரதிய ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக், சந்திராணி முர்முனாவை யாரும் எதிர்பாரா விதத்தில் கட்சியின் வேட்பாளராக தேர்தலில் நிறுத்தினார். புவனேஸ்வரில் உள்ள எஸ். ஓ. ஏ. பல்கலைக்கழகத்தில் படித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் பி.டெக் பட்டதாரியாக வெளிவந்திருக்கும் இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனந்த நாயகி 65,703 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். (இவர் ஏற்கனவே 2 முறை பாரதீய ஜனதா கட்சியின் எம்பியாக இருந்திருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது).

முன்னதாக 15ஆவது நாடாளுமன்றத்தில் மிக இளவயது உறுப்பினராக அகதா தேகாங்கல் சங்மா இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அவருக்கு வயது 29. அவர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றது நினைவிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *