வாழ்வியல்

புற்று நோய் ஏற்படுத்தும் புகையிலை!


நல்வாழ்வு


புகையிலைப்பொருள் நுகர்வதால் வாய், மூக்கு, நுரையீரல், குடல் , கல்லீரல், கணையம், சிறுநீரகம்,

சிறுநீர்ப்பை, கருப்பைவாயில் புற்று நோய் ஏற்படும் என்று அறிவியல் ஆராய்ச்சியில் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மாரடைப்பு மூளையின் இரத்த நாள நோயாகும். புகையிலையின் பாதிப்பால் இரத்த நாளம் சுருங்குகிறது அல்லது வெடிக்கிறது. இதனால் நினைவிழந்து பக்கவாதம் உண்டாகிறது.

புகையிலை இதய நாளங்களைப் பாதிப்பதால் இரத்த ஒட்டம் குறைகிறது அல்லது இதயத்தசைகள் செயலிழக்கின்றன. இது இதய நாள நோய் எனப்படும். இதனால் மாரடைப்பு ஏற்படும்.

பிற ஆபத்து விளைவிக்கும் காரணிகளான கொழுப்பு, மிகை இரத்த அழுத்தம் ஆகியவற்றோடு புகைபிடித்தல் ஒத்துழைத்து இதய நாள நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

நாட்பட்ட நுரையீரல் அழற்சி, திசுவிரிவாக்கம் ஏற்படுகிறது. கடுமையான ஆஸ்துமாவுடன் புகைபிடித்தல் தொடர்பு உடையது .

காச நோய் , பேறுகால பாதிப்பும் விளைவுகளும் (Effect on pregnancy and its outcome) கர்ப்பகாலத்தில் இரத்த ஒழுக்கு கரு இடம்மாறுதல், கர்ப்பச்சிதைவு , குறைப்பிரசவ, இறந்து பிறத்தல் , நச்சுக்கொடி பிரச்சினைகள் பிறந்த குழந்தைகளுக்கும் குழந்தைப்பருவத்திலும் பாதிப்புகள் (Effects on newborns and childhood) கர்ப்ப காலத்தில் தாய் புகையிலையைப் பயன்படுத்துவதால் உண்டாகிறது.

குழந்தைப் பருவத்தில் பிறர் புகைப்பதால் உண்டாகும் புகையைச் சுவாசிப்பதாலும் குழந்தைக்கும் தாய்க்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்று ஆய்வுகளில் தெரியவருகிறது.

தாய் புகைப்பதால் குழந்தைக்கு பிறவிக் குறைபாடுகளான முகவாய்ப் பிளவு, வளைபாதம், இதய மேலறை-இடைச்சுவர் குறைபாடுகள் ஏற்படலாம் ; .

முடக்கு வாதம் , சிறுநீரகம் செயலிழப்பு ,கண் நோய்: கருவிழிச் சிதைவு, பற்சொத்தை , நீரிழிவு , குடல் அழற்சி நோய்கள் , விறைப்புக் குறைபாடு ஆகியவையும் புகையிலைப் பழக்கத்தோடு தொடர்புடைய நோய்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published.