கீவ், ஜன. 7–
புற்று நோயால் அவதிப்படும் புதின் விரைவில் இறந்துவிடுவார் என உக்ரைனின் உளவுத்துறை தலைவர் தகவல் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியது. பல மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடந்து வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயன்று வருகின்றன. இந்தச் சூழலில், அவ்வப்போது புதினின் உடல்நிலை குறித்த தகவல்களும் வேகமாக பரவி வருகின்றன. கடந்த சில மாதங்களாக, புதினின் கண்பார்வை நாளுக்கு நாள் மங்கி வருவதாகவும், புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.
அதைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாகவும், இதனால் புதினின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாகவும், அவர் இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறியிருப்பதாகவும் இங்கிலாந்து ஊடகம் தகவல் ஒன்றியை வௌியிட்டு இருந்தது.
அதை உறுதிப்படுத்தும் விதமாக உக்ரைன் உளவுத்துறை அதிகாரி கைரிலோ புடானோவ் என்பவர் ஏபிசி என்ற செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,” ரஷ்ய அதிபர் புதின் நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவருக்கு புற்றுநோய் இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.
அவர் கூடிய விரைவில் இறந்துவிடுவார் என்று நான் நினைக்கிறேன். புதினுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து எங்களுக்கு இந்த தகவல் தெரியவந்தது என்று அவர் தெரிவித்தார்.