செய்திகள்

புற்றுநோய் சிகிச்சைக்கு அப்பல்லோ முனிச் இன்சூரன்ஸ் புதிய ‘ஐ கேன்’ காப்பீடு திட்டம்

சென்னை, அக் 11–

புற்றுநோய் ஏற்பட்டால், அதன் சிகிச்சைக்கு வழக்கமான சிகிச்சையுடன், நவீன புரோட்டான் பீம் தெரபி, ஸ்டெம் செல், ஹார்மோன், நோய் எதிர்ப்பு தெரபி சிகிச்சையும் பெற வழி செய்யும் அப்பல்லோ முனிச் இன்சூரன்சின் புதிய ‘ஐ கேன்’ என்ற திட்டத்தை தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி நந்தினி அலி அறிமுகம் செய்தார்.

இந்த பாலிசி ஆண்டுக்கு ஆண்டு வாழ்நாள் முழுவதும் புதுப்பிக்கலாம். நோய் கண்டறியப்பட்டால் இன்சூரன்ஸ் தொகையில் 60% உடனடியாக பெறலாம். மீண்டும் புற்றுநோய் ஏற்படுவது தெரிய வரும்போது 100% வழங்கப்படும். ஆண்டுக்கு 2 முறை ரூ.3000 மதிப்பில் மருத்துவ பரிசோதனை பெறலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்பும், டிஸ்சார்ஜ் ஆன பிறகும் ஏற்படும் செலவுகளையும் இந்த இன்சூரன்ஸ் காப்புறுதி அளிக்கும். ஆம்புலன்ஸ் கட்டணமும் ஏற்கப்படும். இதில் 5 முதல் 65 வயதில் உள்ளவர் சேரலாம் என்றார் நந்தினி அலி.

இந்த காப்பீடு புற்றுநோய் திட்டமானது, ஆரம்பகட்ட மற்றும் முற்றிய நிலையில் இருக்கும் அனைத்து வடிவிலான புற்றுநோய்களுக்கும் காப்புறுதியை அளிக்கிறது. கீமோதெரபி, ரேடியோதெரபி மற்றும் உறுப்பு மாற்றம் போன்ற வழக்கமான சிகிச்சை முறைகளுக்கு காப்புறுதி அளிக்கும் வழக்கமான திட்டம் போலின்றி, இத்திட்டம், புரோட்டான் பீம் தெரபி, ஹார்மோனல் தெரபி, ஸ்டெம் செல் மாற்றம், இம்யுனோதெரபி போன்ற நவீன சிகிச்சைகளைப் பெறுவதற்கான விருப்பத்தேர்வு பலன்களையும் அளிக்கிறது. இத்திட்டம் கிரிட்டிகல்கேர் மற்றும் பேமிலிகேர் ஆகிய சிறப்பம்சங்களுடன் வெளிவருகிறது.

ஒவ்வொரு ஆண்டும், 7 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் புற்றுநோய் நோயாளிகளாக பதிவு செய்யப்படுகின்றனர். புற்றுநோயுடன் வாழும் இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை 2.5 மில்லியனாக இருக்கும் என்று எதிர்நோக்கப்படுகிறது.

இது பற்றி அறிய www.appollomunichinsurance.com வலைததளத்தைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *