அறிவியல் அறிவோம்
புற்றுநோயின் அறிகுறி உடல் அணுக்களின் அசாதாரண வளர்ச்சியாகும். இரசாயன தடுப்பில் நடத்தப்பட்ட ஒரு விரிவான ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் இப்போது போன்ற இயற்கைத் தாவரங்கள், காய்கறிகள், மற்றும் பழங்களில் புற்று நோய் எதிர்க்கும் தன்மையை அலசினர்.
குங்குமப்பூ வயிற்று புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய்கள் போன்ற பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு எதிராக தடுப்பு செயல்திறனை கொண்டது என்று ஆராய்ச்சியில் கண்டறிந்து அறிவித்தனர்.
குங்குமப்பூவின் இந்த புற்று நோய் எதிர்ப்பு பண்புகளுக்கு காரணம் அதிலுள்ள குரோசின் மற்றும் குரோசிடின் போன்ற கரோட்டினாய்டுகள் ஆகும். இந்த கரோட்டினாய்டுகள் உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியை தடுத்துச் சாதாரண அணுவளர்ச்சியை ஒழுங்குபடுத்துகின்றன.
நச்சுகள் எனும் பொருட்களை உடல் இயற்கையாகவே தயாரித்து சேகரிக்கின்றது; அல்லது வெளியிலிருந்து வந்து சேர்கிறது. வெளிப்புற நச்சுகள் பல்வேறு பூச்சிக் கொல்லிகள் மற்றும் கிருமிக் கொல்லிகளிலிருந்து வருகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவுகள், மாசுபாடு மற்றும் சோப்புகள், சாம்பு ஆகியவற்றில் உள்ள இரசாயன பொருட்கள் உடலில் நச்சுத் தன்மையை உருவாக்கும் .
நச்சு நீக்கியாக குங்குமப்பூ உதவுகிறது.
புற்றுநோய்களைத் தடுக்கும் குங்குமப்பூவை சாப்பிடுவது நல்லது என அன்மையில் நடந்த அறிவியல் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.