வாழ்வியல்

புற்றுநோயை தடுக்கும் ‘காராமணி’

பயத்தங்காய் அவரை குடும்பத்தை சேர்ந்த ஒரு காய்கறியாகும். பயத்தங்காய் என்பது இளம் பச்சை நிறத்தில் பீன்ஸை போலவே இருக்கும். ஆனால் பீன்சை விட மெல்லியதாகவும் நீளமானதாகவும் இருக்கும். உள்ளே தட்டப்பயரை போல் இளம் பயிர்கள் இருக்கும். இதனை ‘காராமணி’ என்றும் கூறுவார்கள்.

பயத்தங்காயில் உள்ள பைட்டோகெமிக்கல் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் இரண்டும் புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டவை. பயத்தங்காயில் நார்ச்சத்து, ஃபோலேட், இரும்புச்சத்து, அத்தியாவசிய தாதுச்சத்துகள் மற்றும் வைட்டமின்களை கொண்டது. புரதக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த காய் அவசியமான ஒன்றாகும். முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போட நினைப்பவர்களும் அடிக்கடி காராமணியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பயத்தங்காயில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டும் அதிகம். இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். நீரிழிவு கட்டுக்குள் வரும். இதயம், சிறுநீரகங்கள் உள்பட உடலின் முக்கிய உறுப்புகள் சீராக இயங்க அவசியத் தேவையான பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *