வாழ்வியல்

புற்றுநோயை ஏற்படுத்தும் கால்சியம் குறைபாடு: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு


அறிவியல் அறிவோம்


உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் உடலில் உள்ள கால்சியத்தின் அளவு குறையும் பொழுது புற்றுநோயானது உடம்பில் வருகிறது என்பதை கண்டறிந்துள்ளனர்,

குடல் புற்றுநோய் பற்றி உலகம் முழுவதும் பலவிதமான ஆராய்ச்சிகளும் கூறுவது என்னவென்றால் உடலில் உள்ள கால்சியத்தின் அளவு குறையக் குறைய பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

முக்கியமாக அடினோமா டியூமர் என்பது கோலன் புற்றுநோய்க்கு அடித்தளமாக அமைகிறது. இந்த டியூமர் ஆனது கால்சியம் குறைபாடு மூலமாகவே வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த குறைபாடு அதிகரிக்க அதிகரிக்க அது புற்று நோயாக மாறிவிடுகிறது என்று கூறுகின்றனர்.

கால்சியத்தின் அளவு குறையக் குறைய பலவிதமான உடல் உபாதைகள் ஏற்பட்டு கொண்டிருக்கும். முக்கியமாக இருதய கோளாறுகள் ஏற்படும் என்று நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் என்கிற பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

நம் இருதயம் இயங்குவதற்கு பலவிதமான விட்டமின்கள் மினரல்கள் தேவைப்படுகிறது. அதில் முக்கியமானதுதான் கால்சியம். கால்சியம் உடலில் குறைபாடு ஏற்படும்போது, மாரடைப்பு போன்ற இதய சம்பந்தப்பட்ட பலவிதமான வியாதிகள் வருவதற்கு அடித்தளமாக அமைகிறது. உங்கள் இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க கால்சியம் சாப்பிட வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.

உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படும் பொழுது நம் உடலில் உள்ள ரத்தக் அழுத்தத்தின் அளவும் அதிகமாகிறது. அதாவது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அதிகமான மன அழுத்தம் ஏற்படுகிறது.

உயர் ரத்த அழுத்தம் ஏற்படும்போது அந்த உயர் ரத்த அழுத்தமே பலவிதமான வியாதிகளுக்கு வித்திடுகிறது.

மேலும் அதிகமான மன அழுத்தம் டென்ஷன் என்பது நம் மன அமைதியை குலைத்து விடுகிறது.

எனவே நம் உடலில் கால்சியத்தின் அளவு முடிந்த அளவு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் . பால் , பழங்கள், கீரைகள் , முட்டை , மீன் உணவுகளில் கால்சியம் சத்து அதிகம்.

நாம்உண்ணும் உணவுகளிலும் கால்சியம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published.