செய்திகள்

புறநகர் ரெயில்களில் மக்கள் நாளைமுதல் பயணிக்கலாம்

சென்னை, ஜூன் 24–

சென்னை புறநகர் ரெயிலில் நாளை முதல் மக்களும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, சென்னை புறநகர் ரெயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பணியாளர் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்ட இந்த ரெயில்களில், இதுவரை அத்தியாவசிய பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மட்டுமே பயணித்து வந்தனர்.

பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் புறநகர் ரயிலில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுள்ளது. பெண்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைத்து நேரத்திலும் பயணிக்கலாம்.

ஆண்களுக்கான நேரம்

அதேவேளை ஆண்கள், புறநகர் ரெயில்களில் காலை 9.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் கடைசி ரெயில் இயக்கப்படும் வரையிலும், ஆண் பயணிகள் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் மக்கள் யாரும் முகக்கவசம் இல்லாமல் இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *