செய்திகள்

புர்ஜ் கலீபா கோபுரத்தில் ஒளிரப்பட்ட தமிழ்நாடு காட்சி படம்

மு.க.ஸ்டாலின் ரசித்து பார்த்தார்

சென்னை, மார்ச் 26–

துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கோபுரத்தின் மீது ஒளிபரப்பட்ட தமிழ்நாடு பற்றிய காட்சிப் படத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரசித்து பார்த்தார்

தமிழ்நாடு வார விழாவையொட்டி, துபாயில் உள்ள 2,217 அடி உயரமுள்ள உலகிலேயே அதிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா கோபுரம் மீது தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அழகிய காட்சி பட தொகுப்பு நேற்று இரவு ஒளிரப்பட்டது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரசித்து பார்த்தார்.

இந்த நிகழ்வுகளின் போது, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பூஜா குல்கர்ணி, தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.