செய்திகள்

புரோ கபடி லீக்: முதல் நாள் ஆட்டத்தில் குஜராத், யு மும்பா அணிகள் வெற்றி

ஆமதாபாத், டிச. 3–

புரோ கபடி லீக் முதல் நாள் நடைபெற்ற 2 போட்டிகளில் குஜராத், யு மும்பா அணிகள் வெற்றி பெற்றன.

12 அணிகள் இடையேயான 10-வது புரோ கபடி லீக் போட்டி ஆமதாபாத்தில் நேற்று இரவு தொடங்கியது. இதில் தொடக்க லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

முதல் பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 16-–13 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. 2-வது பாதியின் தொடக்கத்தில் குஜராத் அணியின் சோனு தனது அற்புதமான ரைடில் 5 புள்ளிகள் எடுத்து ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினார். முடிவில் குஜராத் அணி 38-–32 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான யு மும்பா அணி 34-–31 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாசை வீழ்த்தியது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்-தபாங் டெல்லி (இரவு 8 மணி), குஜராத் ஜெயன்ட்ஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *