செய்திகள்

புரோ கபடி லீக்: புனே, தபாங் டெல்லி அணிகள் வெற்றி

புனே, டிச. 17–

புரோ கபடி லீக் போட்டியில் புனே, தபாங் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன.

12 அணிகள் இடையிலான 10-வது புரோ கபடி லீக் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பெங்கால் வாரியர்ஸ், புனேரி பால்டன் அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய புனே அணி 49-–19 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை எளிதில் தோற்கடித்தது. புனே அணியில் மோஹித் கோயத் 12 புள்ளியும், கேப்டன் அஸ்லாம் முஸ்தபா 10 புள்ளியும் எடுத்து ரைடில் கலக்கியதன் முலம் 3-வது வெற்றியை ருசித்தது. 5-வது ஆட்டத்தில் ஆடிய பெங்கால் அணிக்கு இது முதல் தோல்வியாகும்.

மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி 51–-40 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்து 2-வது வெற்றியை தனதாக்கியது. தெலுங்கு டைட்டன்ஸ் தொடர்ந்து 5-வது தோல்வியை சந்தித்தது.

இன்றைய ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ் – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி), தமிழ் தலைவாஸ் – யு மும்பா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *