சென்னை, அக்.16–
புரட்சிச் சுடர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகத் தமிழ்நாட்டில் தோன்றிய புரட்சிச் சுடர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள்! அந்நியரின் ஆதிக்கம் பொறுக்காமல், நெஞ்சை நிமிர்த்திப் போரிட்ட அவரது புகழ், தென்னாட்டின் வீரம் செறிந்த வரலாற்றுப் பக்கங்களில் எந்நாளும் ஒளிவீசும்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.