சென்னை, டிச.10-
சென்னை மக்கள் புயல் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க சென்னை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புயல் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் இருக்கும் மக்கள் உணவு உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் 044 – 25619206, 25619207, 25619208 என்ற தொலைபேசி எண்களிலும், 94454 77205 என்ற வாட்ஸ்–அப் எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.