‘பெஞ்ஜல்’ புயல் காரணமாக மழை பெய்யும் மாவட்டங்களில் இன்று தியேட்டர்கள், நகைக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெஞ்சல் புயல் தாக்கத்தால் கன மழை கொட்டி வருகிறது.
இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட மழை பெய்யும் மாவட்டங்களில் தியேட்டர்கள் இன்று இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது புயல் காரணமாக இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து நகைக்கடைகளும் மூடப்படும் என்று நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி அறிவித்துள்ளார். கனமழையால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதாலும், நகைக்கடைகளுக்கு வருவதில் சிக்கல் ஏற்படும் என்பதாலும் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு இருக்கக்கூடிய மாவட்டங்களில் உள்ள மொத்தம் 7000 நகைக்கடைகள் இன்று மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.