செய்திகள்

புனே அருகே தண்டவாளத்தில் பாறாங்கல்: – பயணிகள் 2 மணி நேரம் தவிப்பு

Spread the love

மும்பை,ஜூன்.14–
புனே அருகே தண்டவாளத்தில் பாறாங்கல் கிடந்ததால் சஹ்யாத்ரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த பயணிகள் 2 மணி நேரம் தவித்தனர்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து கோலாப்பூர் செல்லும் சஹ்யாத்ரி எக்ஸ்பிரஸ் நேற்று புறப்பட்டு சென்றது. இரவு 8.30 மணியளவில் புனே அருகே லோனாவாலா நோக்கி சென்றது. அப்போது மங்கி ஹில் மற்றும் தாக்குர்வாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் பெரிய பாறாங்கல் கிடப்பதை கண்டார் டிரைவர். உடனே விரைவாக செயல்பட்டு பிரேக்கை அழுத்தி ரெயிலை நிறுத்தினார். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்த ரெயில்வே ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு சென்று தண்டவாளத்தில் கிடந்த பாறாங்கல்லை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 2 மணிநேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். இதைத்தொடர்ந்து சஹ்யாத்ரி எக்ஸ்பிரஸ் மாற்று வழியில் புனே நோக்கி சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *