ஜட்ஜ் சிவராமனின் மகள் கெளரிக்கு ஆடம்பரமாக ஆபட்பரியில் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை வேதமூர்த்தி முன்னேறத் துடிக்கும் அட்வகேட். அவர்களின் வாழ்க்கை சீரும் சிறப்பாக அமைந்தது. சிவராமனும் சீர் செனத்தி தன் அந்தஸ்திற்கேட்ப நிறையச் செய்தார்.
வேதமூர்த்தி – கெளரி 2 பெண் குழந்தைகளும் ஒரு பையன் ரமணனும் பிறந்தார்கள். பெண்கள் கோமளாவும் சியாமளாவும் படித்தவுடனேயே வந்த வரன்களில் முன்னேற துடிக்கும் பையன்களாகப் பார்த்து திருமணம் முடித்தார்கள். அவர்களும் சவுக்கியமாக வாழ்ந்தனர்.
மகன் ரமணனுக்கும் கீதா என்ற பெண்ணைப் பார்த்து திருமணம் முடிந்தார்கள்.
ரமணனுக்கும் கீதாவுக்கும் அபர்ணா, அம்ரிதா என்ற 2 பெண் குழந்தைகள் பிறந்தனர்..
கெளரியும் தன் மகள்களுக்கு தன் நகைகளை எல்லாம் போட்டாள். மருமகள் கீதாவையும் மகளாகவே பாவித்து வந்தாள்.
கெளரிக்கு கொலு வைப்பது என்பது மிகவும் பிடித்தமான பண்டிகை நாள்.
ரமணனின் மனைவி கீதாவுக்கும் மிகவும் கொலு வைப்பதில் ஈடுபாடு அதிகம்.
அவள் புதுமையான கொலுவை வைப்பாள். கண்டிப்பாக பதிய ‘தீம்’ படி பொம்மைகளை அடுக்குவாள். அலங்கார விளக்குகளால் ஜொலிக்கும் எல்லோரையும் கூப்பிட்டு தாம்பூலம் கொடுத்து மகிழ்விப்பாள்.
ஒரு தடவை கெளரி தன் பொம்மைகளை எடுத்து வைத்திருந்த தன் நகைகளை எல்லாம் போட்டு அடுக்கி வைத்திருந்தாள். விஜயதசமி அன்று பொம்மைகளை எடுத்து வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். வேதமூர்த்தி பொம்மைகளை எல்லாம் மரப் பெட்டியில் வைத்து பரண் மேல் வைத்து விட்டார். மறு வருடம் வேதமூர்த்தி மரணமடைந்து விட்டார். அடுத்த 3, 4 வருடங்கள் கொலு வைப்பதும் நின்று விட்டது. பிறகு மருமகள் கீதா தன் பொம்மைகள் வரைக்கும் கொலு வைத்தாள். கெளரிக்கும் உடலளவில் தளர்ச்சி வந்து விட்டது. கொலு வைக்கவும் தெம்பு இல்லை. வருமானமும் கெளரிக்கு சுருங்கி விட்டது. அவர் மனதில் மட்டும் தன் ராமன், சீதை, லட்சுமணர்களும் பட்டினியாக இருப்பது கஷ்டமாக இருக்கும்.
திடீரென அபர்ணா தன் அருகில் வந்து பாட்டி உங்கள் பழைய பொம்மை பார்க்க ஆசையாக உள்ளது. இந்த வருடம் உங்கள் பொம்மைகளை வைத்து கொலுப்படியை அலங்கரிக்க வேண்டும் என்று அபர்ணா சொன்னாள். கெளரிக்கு தலைகால் புரியவில்லை. இந்த வருடம் நம் பொம்மைக்கு விதவிதமான சுண்டல் செய்து படைக்க வேண்டும் என்று திட்டமிட்டாள்.
மேலும் பேத்திக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது. அவளுக்கு என்ன பரிசளிப்பது என்ற கவலை வேறு வந்து விட்டது.
அபர்ணா எல்லாப் பெட்டிகளையும் ஆளை வைத்து இறக்கி விட்டாள். பாட்டியிடம் எல்லா பொம்மைகளையும் எங்கே வாங்கினீர்கள் என்றாள். பாட்டி சொன்னாள் அப்போதெல்லாம் கடைகள் கிடையாது. பண்ருட்டியிலிருந்து ஆட்கள் தலையில் கூடையில் வைத்து சுமந்து கொண்டு வருவார்கள். நல்ல சுட்ட பொம்மைகளை அவர்களே வண்ணம் தீட்டி கொண்டு வருவார்கள். நம் பழைய பொம்மைகளுக்கும் மெருகு போட்டுத் தருவார்கள். நாம் மதியம் சாப்பாடு கொடுத்து சாப்பிட்டுவிட்டு மாலையில் சென்று விடுவார்கள் என்று கூறினாள். கொண்டு வந்த பொம்மைகள் அனைத்தும் விற்று தீர்ந்து விடும் என்றாள் பாட்டி.
அம்ருதா எல்லாப் பெட்டிகளையும் திறந்து பார்த்ததும் இவ்வளவு அழகாக இருக்கிறதே என்று அதிசயப்பட்டாள். அப்போது தான் ஒரு அதிசயம் நேர்ந்தது. ஒரு பழைய பெட்டியைத் திறந்தாள். அதில் ஒரு நார் மடிப் புடவையை சுற்றி ஒரு லட்சுமி, சரஸ்வதி பொம்மைகள் இருந்தன. அதில் போட்டு அலங்கரித்த சிகப்புக்கல் அட்டிகையும் வெள்ளைக்கல் பதக்கமும் கழுத்தை அலங்கரித்தன. அவற்றை கெளரி அந்த காலம் தேடி தேடிப் பார்த்து காணவில்லை என்று நினைத்தவை வேதமூர்த்தி பெட்டியை கடைசியில் மேலே தூக்கி வைத்து விட்டார். தற்போது பாட்டிக்கு சமயத்தில் புதையலாக கிடைத்து விட்டது. பாட்டியின் பேத்திக்கு என்ன பரிசு கொடுப்பது என்ற கவலை விட்டது.
சிவப்புக்கல்லும் ரங்கூனில் வாங்கியவை. வெள்ளைக்கல் பதக்கம் பாளையம் ஜமீந்தாரினியான கெளரியின் பாட்டி கெளரிக்கு கொடுத்தது. அதில் நீலக்கல் பதித்திருக்கும். புதையல் கிடைத்ததாக பேத்திக்கு அணிவித்து அழகு பார்க்க தயாரானாள்.
புதையல் கிடைதது. அபர்ணா மூலமாக நகைகள் கிடைத்தது அருமையான பதிவு வாழ்க வாழ்க வளர்க