செய்திகள்

புதுவை மாநிலத்தில் 5 மாதங்களுக்கு பிறகு கொரோன அதிகரிப்பு

புதுவை, மார்ச் 24–

புதுச்சேரியில் 5 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 100க்கு மேல் பதிவாகி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தான் அதிகளவில் பாதிப்பு பரவி வருகிறது என்று புள்ளிவிவரங்கள் கூறுகிறது. நாளொன்றுக்கு பதிவாகும் பாதிப்பில் கிட்டத்தட்ட 80 சதவீதம், இந்த மாநிலங்களில் இருந்தே பதிவாகிறதாம். இதனால் அந்தந்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கையை கையாண்டு வருகின்றன.

இந்த நிலையில், புதுச்சேரியில் 5 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 100க்கு மேல் பதிவாகி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் புதிதாக 126 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 2 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அங்கு மொத்தம் 40,645 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 679 பேர் உயிரிழந்த நிலையில், 39,380 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *