புதுவை , ஆக. 8 –
புதுவை சட்டசபையிலிருந்து திமுக– காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
புதுவை மாநில நிதிநிலை அறிக்கை மீது இன்று பொது விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்கட்சி தலைவர் சிவா ( திமுக) எழுந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து புதுவை அரசு மாணவர்களுக்காக 50 சதவீத இடஒதுக்கீடு நடைபெற்றுத் தராதது ஏன் என்று கேட்டார்.
அதற்கு சபாநாயகர் செல்வம் குறுக்கிட்டு மத்திய அரசு இதற்கான ஆணை வெளியிட்டிருந்தால் அதைக் காட்டுங்கள் என்று கூறினார்.
இந்த அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து புதுவை அரசு மாணவர்களுக்காக 50 சதவீத இடஒதுக்கீடு பெற்றுக்கொடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? என்று திமுக – காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து கேட்டனர். அப்போது சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது .
மீண்டும் சபாநாயகர் செல்வம் குறுக்கிட்டு இது தொடர்பாக முதலமைச்சர் தலைமைச்செயலாளர் , சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரை அழைத்தப்பேசி உரிய நடவடிக்கை எடுப்பார் என்று கூறினார். அவர் பதிலை ஏற்காத எதிர்கட்சி திமுக –காங்கிரஸ் உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தார்கள்.