செய்திகள்

புதுவையில் 9 வயது சிறுவன் உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா

Spread the love

புதுவை,மே. 23 –

புதுவையில் 9 வயது சிறுவன் உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுவையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 19 ஆக இருந்தது. அவர்களில் காரைக்காலில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் குணடைந்து இன்று வீடு திரும்பினார்.

இன்று வந்த 8 பேரையும் சேர்த்து புதுவையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *