செய்திகள் போஸ்டர் செய்தி

புதுவையில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பரீட்சை இல்லாமல் அனைவரும் பாஸ்

Spread the love

குடும்பங்களுக்கு தலா ரூ.2000 அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பப்படும்:

முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

 

புதுவை, மார்ச் 25–

புதுவையில் அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2000 அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.

முதல்வர் நாராயணசாமி அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

மக்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும். பொது மக்கள் கூட்டமாகக் கூடக்கூடாது. திருவிழாக்கள் , திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புதுவையில் அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.2000 அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பப்படும்

என்று முதல்வர் நாராயணசாமிகூறினார்.

புதுச்சேரியில் 1 முதல் 9 ம் வகுப்பு வரை பரீட்சை இல்லாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் பரீட்சை எழுதாமல் தேர்ச்சி செய்யப்படுவதாக புதுவை கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

புதுவையில் எல்லைகள் மூடப்பட்டன. காய்கறி , மளிகை, மருந்து கடைகள் திறந்திருந்தன. மக்கள் அத்தியாவசியப்பொருள்கள் வாங்கிச்சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *