புதுடெல்லி, ஏப் 18–
புதுடெல்லியில் உள்ள சீலம்பூரில் 17 வயது வாலிபர் நேற்றிரவு 7.40 மணியளவில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உறவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் நிலவியது.
தாக்குதலை நடத்திய கும்பல் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். கத்திக்குத்தில் உயிருக்கு போராடியவரை மருத்துவமனை அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே இறந்து விட்டார் என்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
கொலை செய்தது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று நேரில் பார்த்தவர்களும், உள்ளூர்வாசிகளும் கூறியதால், அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இந்தக் கொலை, அப்பகுதி மக்களிடையே ஆத்திரத்தைத் தூண்டியது. அவர்கள் வீதிகளில் இறங்கி, சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.
குற்றவாளிகளைப் பிடிக்க பல போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் சிசிடிவி காமிராக் காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளைத் தேடிப் பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.