செய்திகள்

புதுச்சேரியில் 11 மணிக்கு 20.07 சதவீத வாக்குப்பதிவு

புதுவை, ஏப். 6–

புதுச்சேரியில் காலை 11 மணி நிலவரப்படி 20.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

புதுவையில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 1,558 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதற்காக 1,558 வாக்குச் சாவடிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்தத் தோதலில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக, கூடுதலாக 606 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 30 தொகுதிகளில் 635 இடங்களில் மொத்தம் 1,558 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குபதிவு நிலவரம்

புதுச்சேரியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 20.07 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பணிக்காக 2,833 பெண் அலுவலா்கள் உள்பட 6,835 வாக்குச் சாவடி அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் 2,420 உள்ளூர் போலீஸாரும், 901 ஐஆர்பிஎன் காவலர்களும், 1,490 ஊர்க்காவல் படையினரும், 40 துணை ராணுவப் படைக்குழுக்கள் என, மொத்தம் 8 ஆயிரம் பேர் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *