செய்திகள்

புதுச்சேரியில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க உத்தரவு

புதுவை, பிப். 4–

தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. மின் இணைப்புடன் ஆதார் மற்றும் அரசு துறைகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரை இணைப்பது கட்டாயம்

இதற்கு முன் தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து, அதற்கான சிறப்பு முகாம்களையும் நடத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல், அரசு திட்டங்களை பெற ஆதார் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *