செய்திகள்

புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்ச்சி விகிதம் குறைவு: ஒரே ஒரு அரசுப் பள்ளி மட்டுமே 100% தேர்ச்சி

புதுச்சேரி, மே 6–

பிளஸ்–2 தேர்வில் புதுச்சேரி, காரைக்காலில் 92.41 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை விட 0.26 சதவீதம் குறைவு.

மேலும் 55 அரசு பள்ளிகளில் ஒரெயொரு பள்ளி மட்டுமே 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்புகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுவை, காரைக்காலில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்–2 பொதுத்தேர்வை அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 566 மாணவர்களும், 7 ஆயிரத்து 446 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 12 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 12 ஆயிரத்து 5 ஆயிரத்து 867 மாணவர்கள், 7 ஆயிரத்து 81 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 948 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.41 சதவீதம் தேர்ச்சி ஆகும்.

ஒரேயொரு அரசு பள்ளி

100% தேர்ச்சி

புதுவையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களில் 86.39 சதவீதம், காரைக்காலில் 81.65 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மொத்த சதவீதம் 85.35 ஆகும். இதேபோல தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விழுக்காடு 97.85 சதவீதம் ஆகும்.

புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 155 உள்ளன. இதில் 55 பள்ளிகள் (புதுவையில் 51 பள்ளிகள், காரைக்காலில் 4 பள்ளிகள்) 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 55 ஆகும். இதில் புதுச்சேரியை சேர்ந்த மடுகரை அரசு மேல்நிலைப்பள்ளி மட்டுமே நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை 526 பேர் பெற்றுள்ளனர். கணினி அறிவியலில் 165 பேரும், பிரெஞ்சு மொழிப் பாடத்தில் 135 பேரும், வணிகவியலில் 81 பேரும், கணிப்பொறி பயன்பாட்டில் 69 பேரும், பொருளியலில் 22 பேரும், கணிதத்தில் 20 பேரும், கணக்கு பதிவியலில் 15 பேரும், இயற்பியலில் 9 பேரும் உயிரியலில் 4 பேரும், வேதியியலில் 3 பேரும் விலங்கியல், வணிக கணிதம், மனையியலில் தலா ஒருவரும் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

நடப்பு கல்வியாண்டுடன் தமிழக பாடத்திட்டம் அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பில் நிறைவடைகிறது. வரும் கல்வியாண்டிலிருந்து 12ம் வகுப்பில் சிபிஎஸ்இ அரசு பள்ளிகளில் அறிமுகமாகிறது. அவ்வழித்தேர்வுகள் நடக்கவுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *