சென்னை, மார்ச் 26
ஜீ5 இணையதளம் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாவதால் லட்சக்கணக்கானவர்களை கவர்ந்துள்ளது. தற்போது இது ‘எனி டைம் மனோரஞ்சன்’ என்னும் பிரச்சாரத்தை அறிமுகம் செய்து உள்ளது.
ஜீ5 ன் ‘எனி டைம் மனோரஞ்சன்’ வழங்கும் இந்த பிரச்சாரத்தில் மிகவும் பிரபலங்களான ஷ்ரத்தா ஆர்யா மற்றும் தேஜஸ்ரீ பிரதான் ஆகியோர் நடித்துள்ளனர். இது இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சாரத்தை ஜீ5 தலைமை வர்த்தக அதிகாரி மணிஷ் கல்ரா அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், பல்வேறு மொழிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள், செய்திகள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஜீ5 இணையதளத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கி லட்சக்கணக்கானவர்களை மகிழ்வித்துள்ளோம்.
இந்த ‘எனி டைம் மனோரஞ்சன்’ பிரச்சாரத்தின் மூலம் புதிய வாடிக்கையாளர்களையும் தொலைக்காட்சி பார்வையாளர்களையும் எங்கள் தளத்திற்கு கொண்டுவர இருக்கிறோம். ‘எனி டைம் மனோரஞ்சன்’ என்னும் ‘ஏடிஎம்’ என்பதை நாங்கள் தேர்வு செய்ததற்கு முக்கிய காரணம் ‘ஏடிஎம்’ என்பது அனைவரிடமும் நன்கு பரிச்சயமான சொல்லாகும். ‘ஏடிஎம்’ எந்திரங்கள் எப்போதும் பணம் வழங்குவதைப்போல எந்தநேரமும் பொழுதுபோக்கு என்றாலே ஜீ5 தான்அனைவருக்கும் நினைவுக்கு வரவேண்டும் என்பதற்காக இந்த சொல்லை தேர்வு செய்துள்ளோம். பல்வேறு மொழிகளை பல்வேறு சாதனங்களில் பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கவும் டிவி பார்க்கும் பார்வையாளர்களுக்கும் ஓடிடி பயன்பாட்டாளர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் விதமாக எங்களின் புதிய பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தார்.