வாழ்வியல்

புதிய பிரபஞ்சத் தொகுப்பைக் கண்டுபிடித்து சரஸ்வதி என்று பெயரிட்ட இந்திய விஞ்ஞானிகள்

பிரபஞ்சத்தின் பெரும் தொகுப்பு (supercluster of galaxies) ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு சரஸ்வதி என பெயரிடப்பட்டுள்ளது.

இதுபற்றி விபரம் அறிய தொடர்ந்து படியுங்கள் :

சரஸ்வதி எனும் இந்தப் பெரும் தொகுப்பு பிரபஞ்சம் தோன்றிய பெரும் வெடிப்புக்கு பின்னர் பத்து பில்லியன் ஆண்டுகளிலேயே தோன்றியுள்ளது என்று கருதப்படுகிறது.

பிக்பேங் எனப்படும் பெரு வெடிப்பு தியேரிக்கு இது வலு சேர்ப்பதாக உள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இது பூமியிலிருந்து நாலு பில்லியன் ஒளியாண்டு தொலைவில் உள்ளது.

இந்த பிரம்மாண்ட தொகுப்பில் 10000 கேலக்ஸிகளுக்கும் மேல் இருக்கும் எனவும் இவை 42 கேலக்ஸி தொகுப்புகளாக பிரிவுபட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

கேலக்ஸி தொகுப்பு பிரபஞ்சத்தில் சூரியனைப் போன்ற பல கோடிக்கணக்கான விண்மீன்கள் உள்ளதாகும். இவை தமக்குள்ள ஈர்ப்பு விசையால் ஒன்றிணைந்து கேலக்ஸி என்ற அமைப்பை உருவாக்குகின்றன. இதுபோன்ற பல கேலக்ஸிகள் ஒன்று சேர்ந்து கேலக்ஸி பெரும் தொகுப்பு அமைகிறது.

நூறு மில்லியன் ஒளியாண்டு அளவு பெரிதாக இருக்கும். பல நூறு கேலக்ஸி தொகுப்புகளை விஞ்ஞானிகள் இனம் கண்டுள்ளனர். ஆனால் ஐநூறு மில்லியன் ஒளியாண்டுக்கும் கூடுதல் அளவுள்ள பெரும் தொகுப்புகள் ஒருசிலதான் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இப்போதுதான் பெரும் தொகுப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *