வாழ்வியல்

புதிய நட்சத்திர கிரகத்தை கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானி


அறிவியல் அறிவோம்


வியாழன் கோளை விட பெரிய நட்சத்திர கிரகத்தை ஆமதாபாத்தில் இருக்கும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வு கூட விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகமானது 725 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இது நவீன ரேடியல் ஆய்வு கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த கிரகத்தை கண்டறிய 1.2 மீட்டர் நீளம் கொண்ட தொலைநோக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது கண்டறியப்பட்டுள்ள கிரகமானது சிறப்பு தன்மைகளை கொண்டுள்ளது. இது வியாழன் கோளை விட 1.4 மடங்கு பெரியதாக உள்ளது. இந்த அளவீட்டு பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி கடந்த மார்ச் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கிரகத்தின் தரைதளம் மிக அதிக வெப்பம் கொண்டதாக உள்ளது. பெருந்திரள் நட்சத்திரங்களுக்கு அருகில் இருக்கும் இதுபோன்ற கோள்கள் வெப்பமான வியாழன் கோள்கள் என்று அழைக்கப்படுகிறது.

இது ஆமதாபாத் ஆய்வு கூடத்தால் 2-வதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *