சென்னை, ஜன.20–
சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்ற மாதம் தொடக்கத்தில் பவுன் ரூ.39 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இடையிடையே சற்று குறைந்தாலும் பவுன் 42 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்துள்ளது.
நேற்று பவுன் ரூ.42,320 ஆக இருந்தது. இன்று பவுன் ரூ.280 அதிகரித்து ரூ.42,600 ஆக உள்ளது. கிராம் நேற்று ரூ.5,290-க்கு விற்பனை ஆனது. இன்று இது உயர்ந்து ரூ.5,325 க்கு விற்பனை ஆகிறது. இன்று கிராம் ஒரே நாளில் ரூ.35 உயர்ந்து இருக்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.760 அதிகரித்து இருக்கிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்து இருக்கிறது. கிராம் ரூ.73.50-ல் இருந்து ரூ.74.50 ஆகவும் கிலோ ரூ. 73,500-ல் இருந்து ரூ.74,500 ஆகவும் அதிகரித்து உள்ளது.