ஒரு சவரன் ரூ.61,840 விற்பனை
சென்னை, ஜன. 31–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.61,840க்கும், ஒரு கிராம் ரூ.7,730க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.
அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 22ம் தேதி வரலாற்றில் முதல்முறையாக ரூ.60,000-ஐ கடந்து புதிய உச்சம் தொட்டது. அதன்பிறகு சிறிது ஏற்றம், இறக்கம் இருந்தாலும் ரூ.60,000-க்கு குறையாமல் உள்ளது
தமிழகத்தில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.680-ம் உயர்ந்து 60,760 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 60,880 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.960 உயர்ந்தது. அதன்படி, ஒரு சவரன் தங்கம் விலை ரூ.61,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,730க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.62 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
கடந்த 21ம் தேதி ஒரு சவரன் ரூ. 59,600-க்கு விற்கப்பட்ட நிலையில் 10 நாள்களில் ரூ.2,240 உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளியை பொறுத்தவரை இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 107-க்கும், ஒரு கிலோ ரூ. 1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.