செய்திகள்

பீகாரில் 15 வது பாலம் இடிந்து விழுந்தது: 16 இன்ஜினியர்கள் சஸ்பெண்ட் நடவடிக்கை

Makkal Kural Official

2 மாதங்களில் 15 வது பாலம் இடிந்ததால் அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய முடிவு

பாட்னா, ஆக. 17–

கடந்த 2 மாதங்களில் 15 வது பாலம் இடிந்து விழுத்ததையடுத்து

மாநிலத்திலுள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

பீகாரில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் ஒன்று இன்று இடிந்து விழுந்தது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பீகாரில் 14 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதுதொடர்பாக 16 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அவர்கள் மீது துறைரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆய்வு செய்ய உத்தரவு

கிஷன்கஞ்ச், அராரியா, கிழக்கு சம்பாரண், சிவன், சரண் மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் 10 க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்தன. இதனைத் தோடர்ந்து முதலமைச்சர் நிதீஷ் குமார், மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். மேலும், அவர் பாலங்களுக்கான பராமரிப்பு கொள்கையை உடனடியாக தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

பீகாரில் கங்கை நதியின் மீது இருந்த அகுவானி – சுல்தான்கஞ்ச் பாலத்தின் தூண்கள், கடந்த ஆண்டு இடிந்து விழுந்த நிலையில் அதனை புணரமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இந்த நிலையில், கட்டுமானப் பணியில் இருந்த பாலத்தின் மீதி பகுதிகளும், இன்று காலை 8 மணியளவில் இடிந்து விழுந்தன.

இதுகுறித்து பேசிய மாவட்ட நீதிபதி அமித் குமார் பாண்டே, கட்டுமானத்தில் உள்ள பாலத்தின் முழு கட்டமைப்புமே தவறானது என்றும் பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஒப்பந்ததாரர், கட்டமைப்பை அகற்றி வருகிறார் எனவும் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *