பாட்னா, ஆக. 12-
பீஹாரில் சித்தேஷ்வர்நாத் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 35க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர்.
பிஹார் மாநிலம் ஜெஹனாபாத் மாவட்டத்தில் பராவர் மலைப்பகுதியில் உள்ள பாபா சித்தேஸ்வரா நாத் கோயிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற்றது. குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த சிவன் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் நிகழும் இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம், இந்நிலையில், நேற்றும் இந்த விழாவில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். அந்த வகையில் இந்த வருடமும் அதிகபடியான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்த நிலையில் பூக்கடை அருகில் சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதனைக் கட்டுப்படுத்த போலீசார் லத்தியால் பக்தர்களை தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கூட்டநெரிசல் ஏற்பட்டகாக உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்தனர். கூட்டநெரிசலில் சிக்கி 35 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் அலங்கிரிதா பாண்டே தெரிவித்தார். நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஆண்டுதோறும் நிகழும் நிகழ்வு எனத் தெரிந்தும் உள்ளூர் நிர்வாகம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாததே உயிரிழப்பு நேர காரணம் என உயிரிழந்த நபரின் உறவினர் ஒருவர் ஊடகப் பேட்டியில் கூறினார். இவ்வளவு பெரிய கூட்டத்தை சமாளிக்க தேசிய சாரணர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிகளவில் பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் கூட்டத்தை சரியாக நிர்வகிக்கத் தவறிவிட்டனர் என்று விழாவில் கலந்து கொண்ட மேலும் சிலர் கூறினர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இந்தக் குற்றசாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.