செய்திகள்

பிளஸ்-2 மாணவியை காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது

Makkal Kural Official

புதுக்கோட்டை, ஆக. 23–

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் வில்லியம் பால்ராஜ் (வயது 52). இவர் 16 வயது பிளஸ்-2 மாணவியை தனது காரில் அடிக்கடி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் கீரனூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் லதாவிடம் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை செய்த போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் வில்லியம் பால்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *