செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு: கள்ளக்குறிச்சி ஏகேடி அகாடமி மெட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனை

கள்ளக்குறிச்சி, ஜூலை 17–

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கள்ளக்குறிச்சி ஏகேடி அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இம்மாணவிகளுக்கு ஏகேடி கல்வி குழுமங்களின் தாளாளர் மகேந்திரன் பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். விழாவில் ஏகேடி கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து மாணவர்களை பாராட்டினர். முதல் மதிப்பெண் பெற்ற மாணவி தாரணி 600க்கு 587 மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இரண்டாமிடம் பெற்ற மாணவி சுபாஸ்ரீ – 575 மதிப்பெண், மூன்றாமிடம் மாணவி பவானிஸ்வரி 570 மதிப்பெண். பள்ளியின் தேர்ச்சி விகிதம் 99 சதவீதம். வேதியியல் பாடத்தில் ஒருவரும், கணினி அறிவியல் பாடத்தில் 11 பேரும் நூற்றுக்கு நூறு பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *