செய்திகள்

பிளஸ்-2 பொதுத்தேர்வில் கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

Makkal Kural Official

கள்ளக்குறிச்சி, மே.11–

சக்தி மெட்ரிக்‌ மேல்‌நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்‌ பிளஸ்‌ 2 பொதுத்தேர்வில்‌ சிறந்த மதிப்பெண்கள்‌ பெற்று மாவட்ட அளவில்‌ சாதனை படைத்துள்ளனர்‌.

சின்னசேலம்‌ அடுத்த கனியாமூர்‌ சக்தி மெட்ரிக்‌ மேல்நிலைப்பள்ளி மாணவி காவியா, பிளஸ்‌ 2 பொதுத்‌தேர்வில்‌ 589 மதிப்பெண்‌கள்‌ எடுத்து, மாவட்ட அளவில்‌ சிறப்பிடம்‌ பிடித்து சாதனை படைத்தார்‌. இவர்‌, தமிழ்‌ 98, ஆங்கிலம்‌ 99, இயற்பியல்‌ 97, வேதியியல்‌ 99, உயிரியல்‌ 98, கணிதம்‌ 9௪ மதிப்‌பெண்களை பெற்றுள்ளார்‌.

அடுத்ததாக, மாணவி ஷர்மிளா தமிழ்‌ 97, ஆங்கிலம்‌ 97, இயற்பியல்‌ 98, வேதியியல்‌ 100, உயிரியல்‌ 98, கணிதம்‌ 96 என 586 மதிப்பெண்கள்‌ பெற்று பள்ளி அளவில்‌ சாதனை புரிந்துள்ளார்‌.

மேலும்‌, மாணவர்‌ யோகேஷ்வரன்‌ தமிழ்‌ 97, ஆங்கிலம்‌ 92, இயற்பியல்‌ 96, வேதியியல்‌ 98, மற்‌றும்‌ கணினி அறிவியல்‌ 98, கணிதம்‌ 100 என மொத்தமாக 582 மதிப்பெண்கள்‌ பெற்று சாதனை படைத்‌துள்ளார்‌.

கணினி அறிவியல்‌ பாடத்தில்‌ அபினேஷ்‌வரன்‌, நந்தினி, யாழினி, கணிதத்தில்‌ யோகேஷ்‌வரன்‌, வேதியியலில்‌ ஷர்‌மிலா ஆகியோர்‌ ‘நூற்றுக்கு நூறு’ பெற்றனர்‌.

இதுதவிர, 550 மதிப்‌பெண்களுக்கு மேல்‌ 16 பேரும்‌, 500 மதிப்பெண்‌களுக்கு மேல்‌ 44 மாணவ, மாணவியரும்‌, பெற்றுள்‌ளனர்‌. சிறந்த மதிப்பெண்‌ பெற்றவர்களுக்கான பாராட்டு விழா நேற்று நடந்தது.

பள்ளி சேர்மன்‌ ரவிக்‌குமார்‌, நிறுவனர்‌ பார்வதியம்மாள்‌, செயலாளர்‌ சாந்தி ரவிக்குமார்‌, முதல்‌வர்‌ பிரகாஷ்‌ ஆகியோர்‌ மாணவ, மாணவியரை பாராட்டி சால்வை அணிவித்து, கோப்பை வழங்கி கவுரவித்தனர்‌.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *